The interview was given by our Founder Jaivarda in the ‘DinaThanthi’

The interview was given by our Founder Jaivarda in the ‘DinaThanthi’

The interview was given by our Founder Jaivarda in the ‘DinaThanthi’ newspaper Coimbatore Edition Page 22 (22/04/2019).

ஜெய்வர்தா (வாக்காளர் விழிப்புணர்வு தன்னார்வ நிறுவன தலைவர்):- தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில்தான் ஓட்டுப்பதிவுகுறைந்துள்ளது. 2009-ம் ஆண்டில் இருந்தே இந்த நிலை உள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை நாடாளுமன்ற தொகுதியில்தான் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் படிப்பறிவு என்பதுகுறைவு. ஆனால் நகர்ப்புறங்களில்தான் படித்தவர்கள் அதிகம். வேலைவாய்ப்பு பெறுவோர், பொருளாதாரமேம்பாடு அதிகம். இந்த நிலையில் கோவை போன்ற நகரங்களில்தான் தேர்தல் ஆணையம் மூலம் 60 சதவீதம் செலவு செய்தனர். கோவை வளர்ந்து வரும் நகரம். அதிகளவில் கல்வி அறிவு பெற்றவர்கள் உள்ளனர். வேலைவாய்ப்புகளிலும் முன்னிலை வகிக்கின்றனர் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் இல்லாதவர்கள். கண்மூடித்தனமாக முடிவு எடுக்க மாட்டார்கள். இருந்தாலும் களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளும், அவர்களின் வேட்பாளர்கள் மீதும், அவர்களுக்கு வெறுப்பு. அவர்களுடைய விருப்பத்துக்கு ஏற்றவர்கள் இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் முன்னணி வகிப்பவர்கள் என்கிற எண்ணம் படித்த வாக்காளர்கள் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. இதனால் தான் அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட ஆர்வம் காட்டவில்லை. இது போன்ற மனநிலை மூத்த வாக்காளர்கள் மட்டுமின்றி, இளம் வாக்காளர்கள் மத்தியிலும் நிலவியது. இதனால் தான் பெருமளவில் வாக்காளர்கள் தேர்தலையொட்டி அளிக்கப்பட்ட விடுமுறை தினங்களை ஊட்டி, வால்பாறை உள்பட பிற சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தோடு சென்று விட்டனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த தேர்தலில் கடந்த தேர்தலை விட சுமார் 90 ஆயிரம்ஓட்டுகள் குறைந்துள்ளது. தற்போது உள்ள சூழலில் வெற்றி வாய்ப்பை பெறுபவர் மிகக்குறைந்த ஓட்டுகளைத்தான் பெறுவார். இதனால் இழுபறி நிலையே இறுதிவரை காணப்படும். குறிப்பிட்ட ஓட்டுகளில் வெற்றி நிர்ணயிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

 

 

Related Posts